அறிவிப்பு
வணக்கம்!
ஹார்வர்டு தமிழ் இருக்கை தந்த வெற்றிக் களிப்பில் மேலும் பல தமிழ் இருக்கைகளை உருவாக்குவதில் உலகத் தமிழர்கள் முனைந்திருப்பது உவகை அளிக்கிறது. இத்தருணத்தில் தமிழர்களின் அறிவியல் நுட்பத்தை உலகறியச் செய்ய வேண்டுமென்றால் நமது பழந்தமிழ் யோக மற்றும் மருத்துவ முறைகளை இக்கால முறைப்படி ஆய்வு செய்து உலகறியச் செய்வது முக்கியமாகும். இந்த அடிப்படையில் சித்தர்களுடைய யோக அறிவியலை ஆராயும் பொருட்டு "யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை (Thirumoolar Tamil Chair for Yoga Research)" என்ற ஒரு மருத்துவ ஆராய்ச்சி இருக்கையை உருவாக்க முனைந்துள்ளோம். இவ்வகையில் ஏற்கெனவே திருமூலரின் மூச்சுப் பயிற்சியைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முனைவர் சுந்தர் பாலசுப்ரமணியன் போன்றோருடைய ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற இந்த மருத்துவ இருக்கை பேருதவியாக இருக்கும். இவ்விருக்கை தகுதியான அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் அமையவிருக்கிறது. எனவே உங்களது மனமுவந்த நன்கொடைகளை அளித்து ஒரு புதிய முயற்சியை ஊக்குவித்து, தமிழர்களின் மருத்துவ அறிவியலின் மேன்மையை உலகறியச் செய்வோம். நன்றி!
Announcement
Vanakkam!
Following the success story of the Harvard Tamil Chair, we are excited to announce that we are beginning our next project of establishing a Tamil Chair to encourage research on the clinical applications of Yoga methods from our ancient Siddha tradition. The proposed "Thirumoolar Tamil Chair for Yoga Research" will be established at a suitable American university. Pioneering studies like the ones on Thirumoolar Pranayamam and salivary proteins conducted by Dr. Sundar Balasubramanian can be supported by such Chairs in higher education medical institutions. Kindly donate generously towards this new cause and let the world be benefited from the medical wisdom of our ancient Tamil culture. Thank you!